இதுவரை நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ஒரு விஷேட செய்தி

இதுவரை நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ஒரு விஷேட செய்தி

நீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியான நீர் விநியோகத்துக்கு சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி திலின எஸ். விஜேதுங்க கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோயால் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், நிலவும் சூழ்நிலை காரணமாக நுகர்வோர் நீர் கட்டணத்தைச் செலுத்துவதில் தாமதம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply