அரிசி மற்றும் சீனிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை விபரம்

அரிசி வகைகள் விலை - Ceylon Nation News | Today news in Tamil

வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று தெரிவித்தார்.

அதன்படி, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 130 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதிசெய்யாமல் விற்கப்படும் ஒரு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, கீறி சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கு 136 ரூபாவும், ஒரு கிலோ வெள்ளை சம்பா அரிசிக்கு 101 ரூபாவும், ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக101 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை (நாடு) அரிசி கிலோவொன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 94 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி வகைகள் விலை - Ceylon Nation News | Today news in Tamil

அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்குதல் மற்றும் அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply