நாட்டு மக்களிடம் விஷேட கோரிக்கையை முன்வைத்த சரத் வீரசேகர

அடிப்படைவாதிகள் தொடர்பில் தகவல் தாருங்கள்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி அடிப்படைவாத கொள்கையுடைய நபர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயததை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அடிப்படைவாத கொள்கையுடைய நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகின்றது. அடிப்படைவாத கொள்கைகள் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு, சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply