ஹிசாலினி விவகாரம்; இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

News Tamil Sri lanka - ஹிசாலினி விவகாரம்; நீதிமன்ற உத்தரவு

News Tamil Sri lanka – பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று உத்தரவிட்டார்.

மேலும் ரிசாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகம 16 வயதான ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹிசாலினியின் மரணம் குறித்து முதல் தடவையாக வாய்திறந்தார் ரிசாத்

ஹிசாலினி மரணம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 தொடக்கம் 10 வருட சிறை தண்டனை

ரிசாத் பதியுதீன் வீட்டில் வேலை செய்த பெண்களை தேடும் பொலிஸ்

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (30) குறித்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு பிணை வழங்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், கொழும்பு மேலதிக நீதிவான் சஜிந்தா ஜயசூரியவிடம் கோரியிருந்தனர்.

எனினும், கோரிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதிவான் பிணை கோரல் மனுவை மீண்டும் நிராகரித்து, எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில், சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகளும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மேலும் இன்றைய செய்திகள்

இலங்கையில் 70 பில்லியன் வரை சம்பாதிக்கும் சீனி வர்த்தகர்கள்

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

மாறி வழங்கப்பட்ட இரண்டு சடலங்கள் – முஸ்லிம் பெண்ணின் சடலத்துக்கு பதிலாக வேறு பெண்ணின் சடலம் அடக்கம்

News Tamil Sri lanka – சிலோன் நேசன் செய்திகளை வட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்

Leave a Reply