பொது மக்களுக்கு இராணுவத் தளபதியின் அறிவிப்பு – தொடரப்பட உள்ளநடவடிக்கை

30 வயதுக்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கு தடுப்பூசி

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார்.

இன்றைய நிலவரப்படி (28ம் திகதி) 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செகுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தடுப்பூசி பெறாத அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இராணுவ தளபதி பொது மக்களிடம் கோரியுள்ளார்.