2000 ரூபா கொடுப்பனவு தயார் – ஆனால் இவர்களுக்கு கிடைக்காதாம்

2000 ரூபா கொடுப்பனவு தயார் - ஆனால் இவர்களுக்கு கிடைக்காதாம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த நபர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் ஊடாக குறித்த சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்பு மற்றும் கிராமிய குழுக்களின் உதவியுடன் கிராம சேவையாளர் மட்டத்தில் சுகாதார நடைமுறையுடன் குறித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என பொருளாதார புணர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும் இதுவரை பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதற்காக தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரண கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான மேலதிக கோட்பாடுகள் திறைசேறியினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2000 ரூபா கொடுப்பனவு தயார் - ஆனால் இவர்களுக்கு கிடைக்காதாம்

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2,000 ரூபா நிவாரணக்கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதியமைச்சில் இருந்து பிரதேச செயலாளர்கள் அலுவலகத்திற்கு இந்த பணத்தொகையை அனுப்பி அதன் ஊடாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.