​கொழும்பில் நூற்றுக்கு நூறு விதம் பரவியுள்ள டெல்டா – ஏற்பட்டுள்ள அச்சம்

சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 100 சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர அறிவித்தார்

இந்நிலையில், இலங்கையில் “சுப்பர் டெல்டா” பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

எனினும், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது என்பதால், செப்டெம்பர் மாதமளவில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, டெல்டா பிறழ்வு நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்