வௌிநாடுகளுக்கு செல்ல காத்திருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

விமான சேவை செய்திகள் - ஊரடங்கு காலத்தில் தொடரும்

ஊரடங்கு காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டைத் தொடருமாறு ஜனாதிபதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை விமான நிலையங்களின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமான சேவைகள் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.