126 பயணிகளுடன் பறந்த விமானம் – நடுவானில் விமானிக்கு மாரடைப்பு

விமானம் பறக்கும் போது நடுவானில் விமானிக்கு மாரடைப்பு

பங்களாதேஷ் விமானம் ஒன்று ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இவ்விமானம் இந்திய எல்லைக்குள், அராய்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி, மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அத்தோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டுத்தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பங்களாதேஷ் விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அம்பியூலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனே விமானத்தில் இருந்த விமானி அம்பியூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விமானம் பறக்கும் போது நடுவானில் விமானிக்கு மாரடைப்பு

தக்க நேரத்தில் விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர்.

விமானிக்கு தக்க சிகிச்சையளிக்கப்பட்டு அதே விமானத்தில் டாக்காவுக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டார்.