சிறைச்சாலை வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ரிசாத்?

ரிஷாட் பதியுதீன் மீது மற்றொரு பரபரப்புக் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியதாகவும், ம ர ண அச்சு றுத் தல் விடுத்ததாகவும் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் ம ர ண அச்சு றுத் தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி அவர வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு அளித்த வைத்தியர், பின்னர் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு அளித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்தது.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த வழக்கை பொரள்ளை பொலிஸார் தம்மிடம் ஒப்படைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கிய வைத்தியரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததாகவும் கொழும்பு குற்றப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

“நான் இங்கு வந்தபோது நான் என்ன செய்தேன் என்று உனக்குத் தெரியாதா?”

நான் உன்னை வேறொரு உலகத்துக்கு அனுப்ப முடியும், ஒரு மணித்தியாலத்துக்குள் மாற்றி அனுப்ப முடியும்.

நீங்கள் அதிகமாக போராடினால், நீங்களும் உங்கள் காரும் சாலையில் சாம்பலாகி விடுவீர்கள். அதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் மனைவி கணவனையும் உங்கள் குழந்தைகள் தந்தையையும் இழப்பார்கள்.

சந்தேக நபரான ரிஷாட் பதியுதீன், “நான் ரிஷாட் பதியுதீன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறி தன்னை அ ச்சு றுத் தியதாக வைத்தியரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.