திருகோணமலையில் சிறுமிக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்

மூச்சு திணறல் திடீரென சிறுமிக்கு ஏற்பட்டதால் பரபரப்பு

திருகோணமலை – பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியரொருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு ஒக்சிஜன் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,

இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்திற்கு பொறுப்பான வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதாகவும், பனடோல் மாத்திரைகளை பாவித்து வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சிறுமியின் தாயாருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தாயாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a Reply