ஹிசாலினி மரணம் – இன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மலையக சிறுமி ஹிஷாலினி தொடர்பான இன்றைய வழக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுடன் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினி யின் மரணம் தொடர்பிலான வழக்கின் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியூதீனின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றில் இன்று (23) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே ரிஷாட் பதியூதீனின் பெயரும் சந்தேகநபர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சந்தேகநபர்கள் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.