மதுப்பிரியர்களுக்கு எதிராக செந்தில் தொண்டமான் கூறியுள்ள திட்டம்

மதுப்பிரியர்களுக்கு எதிராக செந்தில் தொண்டமான் கூறியுள்ள திட்டம்

மதுபானங்களைக் கொள்வனவு செய்யும் போது, தேசிய அடையாள அட்டையை கட்டாயப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், அந்த இலக்கங்களை வைத்துகொண்டு, அரசாங்கத்தால்
வழங்கப்படும் சகல நிவாரணங்களையும் நிறுத்தவேண்டும் எனக் கோரியுள்ளார்.

“நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் பிரகாரம் முழு நாட்டையும் முடக்கி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடந்த 20ஆம் திகதி இரவுமுதல் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த தினத்தில் மதுபானச்சாலைகளில் அதிகளவானவர்கள் குவிந்ததுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களையும் கொள்வனவு செய்து சென்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

கொவிட் தொற்றால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுப் பொருள்களைக்கூட கொள்வனவு செய்ய முடியாது திண்டாடிவரும் சூழலில் இவ்வாறான நபர்களை காணும்போது பெரும் வேதனை ஏற்படுகிறது.

மதுபானங்களைக் கொள்வனவு செய்பவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் பதிவு செய்ய புதிய முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.

மதுப்பிரியர்களுக்கு எதிராக செந்தில் தொண்டமான் கூறியுள்ள திட்டம்

இவ்வாறு பதிவுசெய்யப்படும் அடையாள அட்டை இலக்கத்தை உடைய நபர்களை அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணத் திட்டத்தில் உள்வாங்கக் கூடாது என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.