தடுப்பூசி பெற்றிருந்த மங்கள சமரவீரவின் திடீர் மரணத்துக்கு காரணம் வௌியானது

மங்கள சமரவீர திடீர் மரணம் - காரணம் வௌியானது

நேற்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பைசர் ஊசி  (pfizer vaccine) இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தவர் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. இவர் கொரோனாவுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது உடல்நிலை மோசமான கட்டத்தில்தான் இருந்துள்ளது.

அவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார்.

கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த மங்கள சமரவீர, நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் சமரவீர நீண்டகாலமாக நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோயினால் அவசியுற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்