கொரானாவில் இருந்து பாதுகாப்பு பெற பௌத்த பிக்குகள் செய்த உலக சாதனை

பௌத்த பிக்கு கள் இணைந்து சாதனை -News tamil Sri lanka

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த பௌத்த பிக்கு கள் இணைந்து இலங்கையில் புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளனர்.

உலகில் மிக நீண்ட பிரித் பிரார்த்தனை நூலை பயன்படுத்தப்படுத்தி பௌத்த பிக்கு கள் பிரார்தனையில் ஈடுபட்டு இந்த சாதனையை செய்துள்ளனர்.

உலக சாதனையாக இது காணப்பட்டாலும், இன்றுவரை இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.

குருநாகல் – மாவத்தகம மீதென்வல பிரதேசத்திலுள்ள போதிமலு விகாரை பிக்குகுள் இணைந்து, அருகிலுள்ள ஏனைய கிராமங்களையும் இணைத்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பிரார்த்தனை நூலினை ஏற்பாடு செய்தனர்.

பெரும்பாலும் இது உலக சாதனையாகக் கருதப்பட்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக குறித்த விகாரையின் பிக்குகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Leave a Reply