போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் பொரளையில் வைத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து கணினி, ஸ்கேனர், ப்ரிண்டர், போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் மற்றும் போலி ஆவணங்கள் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 29,30 மற்றும் 46 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.