பெருந்தொகை பணத்துடன் சந்திரிகா கைது

போதைப்பொருள் வர்த்தகம் செய்யும் பெண் ஒருவர் கைது

இலங்கையின் பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரைச் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொனஹேன விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல்காரரான சந்திரிகா என்பவர், 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கிரிபத்கொடையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

52 அகவையைக் கொண்ட அந்தப் பெண் சந்திரிகா என்றும், அவர் களனியில் வசிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கிரிபத்கொட, ராகம மற்றும் களனி பகுதிகளில் இவர் நீண்ட காலமாக ஹெரோய்ன் விநியோகித்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான சந்திரிகாவிடமிருந்து 11 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் 26,65,100 ரூபாய் பணம் ஆகியன பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர், கிரிபத்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் செய்யும் பெண் ஒருவர் கைது