கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முக்கியமான உணவுகள்

போசாக்கான உணவுகள் கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு

போசாக்கான உணவுகள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முக்கியமானது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு மருந்துகளை உடனுக்குடன் எடுத்துக்கொள்வது போலவே நாளாந்தம் நல்ல போசாக்கான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கொவிட் தொற்றாளர்கள் போஷாக்கு மிகுந்த சீரான உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது சிறந்தது என தெரிவித்தார்.

தினமும் காலை, பகல் மற்றும் இரவு வேளை உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். தமது நாளாந்த உணவில் கீரை வகைகள் மற்றும் பழ வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த நோய்க்கு விஷேடமாக மருந்து எதுவும் கிடையாது. இதற்கு எங்களுக்கு இருக்கின்ற ஒரே தீர்வு எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கூறியுள்ளார்.

அதேபோன்று சீரான முறையில் மனோநிலையை வைத்திருப்பதும் கொரோன தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

போசாக்கான உணவுகள் கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு