பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்து வௌியாகும் செய்தி பொய்யானது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து வதந்தி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனர தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார். அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கோவிட் வைரஸ் தொற்று இல்லை. அத்துடன் அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவரது உடல்நலம் குறித்த வதந்திகள் பொய்யானவை என்றும் பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான நேரத்தில், இந்த தொற்றுநோயை சமாளிக்க நாடு கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் தவறான அறிக்கைகளை பரப்ப வேண்டாம் என்று தாம் பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தகவல் – நெத் நியூஸ்