சிறுநீரை தண்ணீரில் கலந்து பானிபூரியை விற்கும் நபர்

பானி பூரியை சிறுநீரை தண்ணீரில் கலந்து விற்கும் நபர்

இந்தியாவில் சிறுநீரை தண்ணீரில் கலந்த பானி பூரியை விற்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரமான உணவு, சுகாதாரமான வாழிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பது குறித்து வாதங்கள் நீண்ட காலமாக இருந்துவருகின்றன.

ஆனால் அது முழுமையாக சாத்தியமாகவில்லை என்பதை பல சம்பவங்கள் அவ்வபோது நமக்கு நினைவூட்டுகின்றன. அப்படி ஒரு அருவருப்பான சம்பவம் தான் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது.

இது தொடர்பான வீட்யோவில், சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் பானிப்பூரி விற்கிறார் ஒருவர்.

அப்போது அவர் வேலை செய்து கொண்டே பிளாஸ்டிக் குவளையில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சாலையோர கடைகளில் உணவு உண்ண விரும்பும் மக்களுக்கு இந்த வீடியோ எச்சரிக்கை மணி அடித்துள்ளது.