பொட்ட நெளபர் கொரோனாவுக்கு பலி

பாதாள உலகக்குழு பொட்ட நெளபர் கொரோனாவுக்கு பலி

பூஸா சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான பொட்ட நெளஃபர் எனப்படும் மொஹமட் நியாஸ் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை செய்யப்பட்டதற்காக பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.