உலக சாதனை படைத்த இலங்கை வீரர்

பரா ஒலிம்பிக் போட்டி - இலங்கை வீரர் உலக சாதனை

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துபடைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

பரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்றனர்.

கெக்கிராவ பகுதியை சேர்ந்த 35 வயதான தினேஸ் பிரியந்த கெக்கிராவ – இப்பலோகம – காகம தாதுசேன வித்தியாலயத்தில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றினார்.

2004 ஆம் ஆண்டு அவர் இராணுவத்தில் இணைந்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு கிளிநொச்சி பகுதியில் உபாதையடைந்தமையை அடுத்து இராணுவத்தின் ஈட்டி எரிதல் போட்டிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்தார்.

2017 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற பராலிம்பிக் போட்டிகளில் அவர் ஈட்டி எரிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

Leave a Reply