பொது மக்களுக்கு கடும் எச்சரிக்கை – நாட்டு மக்களால் மட்டுமே முடியும்

நிஹால் தல்துவ பொலிஸ் பேச்சாளர் விடுத்த எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply