தேநீர் விலையை அதிகரிக்க தீர்மானம்? புதிய விலை விபரம்

தேநீர் மற்றும் பால் தேநீர் விலையை அதிகரிக்க தீர்மானம்?

சீனி விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் நுகர்வோர் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவார காலப்பகுதிக்குள் ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவால் விலை உயர்வடைந்துள்ளதுடன், தற்போது ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாவாக காணப்படுகிறது.

இந்நிலையில், உணவகங்களில் ஒருகோப்பை தேநீர் விலையை 25 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறினார்.

பால் தேநீர் விலை 50, 55 மற்றும் 60 ரூபாவுக்கு விற்பனையாவதாகவும், நாளையே அரசாங்கம் சீனி விலையை குறைத்தால் தாமும் விலையை குறைப்பதாக அசேல சம்பத் கூறினார்.

எனினும், நாட்டில் ஒரு வாரத்துக்கு தேவையான சீனி கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.