தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் ஆகக்குறைந்த நாளாந்தம் சம்பளம் 640 ரூபாவும் , ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 16 ,000 ரூபாவாகவும் வழங்கப்பட வேண்டும் என தொழில் ஆணையாளர் சட்டத்தரணி பீ.கே.பிரபாத் சந்திர கீர்த்தியினால் தொழில் தருனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில் ஆணையாளர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் ஆகக் குறைந்த வேதனச் சட்டத்தின் 2021 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தச் சட்டம் தொடர்பாக தொழில் தருனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஆகக் குறைந்த சட்டத்தின் பிரிவில் , தனியார் துறையின் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஆகக்குறைந்த மாதாந்த வேதனம் 10,000 ரூபா எனவும், நாளாந்த வேதனம் 400 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆகஸ்ட் 16 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் ஆகக்குறைந்த மாதாந்த வேதனம் 12, 500 ரூபாவாகவும் , நாளாந்த ஆகக்குறைந்த வேதனம் 500 ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டு இம்மாதம் 20 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதன்படி ஆகக்குறைந்த வேதனம் 12,500 ரூபா , 2005 வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி 1,000 ரூபா , 2016 வரவு செலவு திட்ட நிவாரணப்படி 2,500 ரூபா என முழு சம்பளம் 16,000 ரூபா வழங்கப்பட வேண்டும்.

தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

இதே அடிப்படையில் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 640 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply