கொழும்பில் தடுப்பூசி போடாதவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

தடுப்பூசி போட்டவர்கள் நடமாடும் வர்த்தகம் செய்யலாம்

கொவிட் தடுப்பூசி போட்டவர்கள் மாத்திரமே கொழும்பு மாவட்டத்தில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட நடமாடும் வர்த்தகத்தை மேற்கொள்பவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் பொருட்களின் விலை காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவசியமானதெனவும் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.