மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை – எப்போது குறையும்?

தங்கம் விலை உயர்வு - தங்கத்தின் விலை எப்போது குறையும்

தங்கத்தின் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து, உச்சத்தினை தொட்டு வருகின்றது. நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடுமோ? என்பது போல் தங்கம் விலை உயர்வு காண ஆரம்பித்து விட்டது.

Gold prices today in Sri lanka – தங்கத்தின் விலை இன்று இலங்கையில்

கடந்த வார முடிவு வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று 1820.25 டாலர்களாக முடிவுற்றது. ஆக வரும் வாரத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொடலாமோ என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

சர்வதேச சந்தையில் கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் குறைவது போல் காணப்பட்டாலும், பிற்பாதியில் மீண்டும் தங்கம் விலை உயர்வு தொட்டது.

தங்கம் விலை கடந்த திங்கட்கிழமையன்று 1781.20 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1778 டாலர்கள் வரையில் சென்றது.

இது தான் அந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1821.90 டாலர்களை தொட்டது. முடிவில் 1820.25 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

இலங்கையில் தங்கம் விலை என்ன என்று பார்த்தால் கடந்த வாரம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சந்தை மூடப்பட்டது.

எனினும் கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி நேற்று சனிக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 124,000/= LKR ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 113,650/= LKR ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தங்கம் விலை நிலவரம் ஊரடங்குக்கு முந்தைய நாள் வரை 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 123,000/= LKR ரூபாவுக்கு வர்த்தகமாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 112,000/LKR ரூபாவுக்கு வர்த்தகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் காண ஆரம்பித்தது.

கடந்த திங்கட்கிழமையன்று 22.985 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 22.925 டாலர்கள் வரையிலும் சென்றது.

எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 24.135 டாலர்கள் வரையிலும், முடிவில் 24.040 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. வார இறுதியில் மட்டும் 2.08% ஏற்றம் கண்டுள்ளது.