தங்கம் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி; இது தங்கம் வாங்க சரியான தருணமா?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தடுமாற்றமாகவே வர்த்தகமாகியது. தங்கம் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல் இருந்தாலும், பிற்பாதியில் தங்கம் விலையானது சரி வினைக் கண்டுள்ளது.

இது வரும் வாரத்திலும் சற்று சரி வினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் இன்னும் குறைந்தால், எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம் என பல கேள்விகள் எழுந்துள்ளன.

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இருந்து சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் விலை இன்னும் சரி வினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்த தரவானது, சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது. இதுவும் டாலருக்கு சாதகமாக வந்துள்ளது.

இது அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு புறம் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின்தா க்க மானது அச் சம் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றது.

பரவி வரும் கொரோனாவின் காரணமாக ஏற்கனவே பல நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தங்கத்தின் அதிக விலை சரிவினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது கடந்த வார தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில், வாரத்தின் பிற்பாதியில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1780.90 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்ச விலையாக 1772 டாலர்கள் வரையில் சென்று திரும்பியது.

இதே செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 1797.60 டாலர்கள் வரையில் சென்றது. எனினும் முடிவில் வெள்ளிக்கிழமையன்று 1782.50 டாலர்களாக முடிவுற்றது.

இந்நிலையில் வௌ்ளிக்கிழமை முடிவில் யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையானது, 24 கரட் தங்கம் ரூபா.123,000 வரையில் விற்பனையாகி உள்ளது.

அதேவேளை வௌ்ளிக்கிழமை 22 கரட் தங்கம் ரூபா.112,000 வரையில் விற்பனையாகி உள்ளதுடன், நேற்று சனிக்கிழமை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் வர்த்தகமாகவில்லை.

வெள்ளியின் விலை நிலவரம்

இதே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், முடிவிலும் சரிவினைக் கண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று 23.745 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகபட்சமாக 23.955 டாலர்கள் வரையிலும், வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.835 டாலர்கள் வரையிலும், முடிவில் 22.968 டாலர்களாக முடிவடைந்தது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த வாரம் போன்றே இந்த வாரமும் குறையுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பு.