தங்கத்தின் விலையில் ஒரே தடவையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு

தங்கத்தின் விலை நிலவரம் என்ன? விலை குறையுமா?

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் குறைவது போல் காணப்பட்டாலும், பிற்பாதியில் மீண்டும் உச்சம் தொட்டது.

இதற்கிடையில் இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? கடந்த ஆண்டு உச்சத்தினை தொட்டு விடுமா? இதனையும் உடைக்குமா? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 1832 டாலர்களை தொட்டு, மீண்டும் 1800 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த வாரத்தில் இறுதியில் நோக்கும் நோக்கும் போது எதிர்பாராத விதமாக தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினைக் கண்டுள்ளது.

தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், வார இறுதியில் ஓரளவு குறையத் தொடங்கியது.

தங்கம் விலை கடந்த திங்கட்கிழமையன்று 1802.30 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதே வாரம் புதன்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1790.70 டாலர்கள் வரையில் சென்றது.

இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 1832.60 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1812.30 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் வௌ்ளிக்கிழமையன்று (30) 24 கரட் தங்கத்தின் விலை ரூபா.120,500 வரையில் விற்பனையாகி உள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் ரூபா.110,500 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.

உலக சந்தையில் வௌ்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே சரிவினையே கண்டது. எனினும் பிற்பாதியில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று 25.270 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று குறைந்தபட்சமாக 24.515 டாலர்கள் வரையிலும் சென்றது.

எனினும் வியாழக்கிழமையன்று 25.875 டாலர்கள் வரையிலும், வெள்ளிக்கிழமையன்று 25.547 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்; இது தங்கம் வாங்க சரியான தருணமா?
தங்கத்தின் விலை இனி எப்படி இருக்கும்? தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஒரு செய்தி