சீனி விலையில் திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

சீனி விலையில் திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

சீனி விலை சடுதியான அதிகரிப்பு மற்றும் அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக நிதியமைச்சருக்கும், வர்த்தகத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலை இன்றைய தினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சீனி விலையானது தற்போது 210 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொலர் விலை அதிகரிப்பதை காரணம் காட்டி வர்த்தகர்களினால் சீனி அதிக விலை க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குற்றம் சுமத்தியுள்ளார்.