சீனியின் விலையை குறைக்க முடியாதாம் – கையிருப்பில் உள்ள சீனியின் அளவு

சீனியின் விலையை குறைக்க முடியாதாம் - கையிருப்பில் உள்ள சீனியின் அளவு

சீனியின் விலையை குறைக்க முடியாதென இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் தேவையான சீனியில் 20 சதவீத சிவப்பு சீனி நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனையவை பிரேஸில் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.