கொவிட்டுக்கு பலியான இளம் தம்பதி – ஆதரவற்றுப் போன 05 வயது மகள்

கொவிட் தொற்றுக்கு பலியான இளம் தம்பதி

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த தம்பதியினர் கிரிபத்கொட பகுதியினை சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய கணவர் கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய மனைவி நேற்று காலையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த தம்பதியினருக்கு 5 வயது மகளொன்றும் உள்ள நிலையில், குழந்தை தாய் ,தந்தையை கொடிய கோவிட் தொற்றால் இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கோவிட் சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.