சமையல் எரிவாயு பிரச்சனையில் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

லாப் கேஸ் சிலிண்டர் நிறுவனம், தன்னுடைய உற்பத்தியை நிறுத்தியமையால், உள்ளூர் சந்தைகளில் கடந்த காலங்களில் கேஸூக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. லிற்றோ நிறுவனம் பழைய விலைக்கே காஸ் விநியோகத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தது.

இந்நிலையில் லாப் நிறுவனம் புதிய விலைக்கு கேஸ் விநியோகத்தை கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், அவ்விரு நிறுவனங்களுக்கும் நேற்று 21ஆம் திகதியன்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

அங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த இராஜாங்க அமைச்சர், உள்ளூர் சந்தையில் நிலவிய கேஸ் தட்டுப்பாட்டுக்கு, நாளை (23) தீர்வு கிடைக்கும் என்றார். எதிர்காலத்தில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றார்.

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என கூறினார்.

லாப் எரிவாயு நிறுவனம் கடந்த நாட்களில் தனது உற்பத்திகளை நிறுத்தியதால் உள்நாட்டு சந்தையில் சமையல் எரிவாயு வுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

கேஸ் சிலிண்டர் விநியோகம் திங்கள் முதல் வழமைக்கு

இந்நிலையில் லாப் கேஸ் சிலிண்டர் எரிவாயு நிறுவனம் புதிய விலையின் கீழ் இன்றிலிருந்து விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.