கல்வி அமைச்சின் விஷேட அறிவிப்பு வௌியானது

கல்வி அமைச்சின் விஷேட அறிவிப்பு வௌியானது

அரச ஊழியர்கள் அனைவரும் நாளை (02) முதல் கடமைகளுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் அவ்வாறு கடமைக்குத் திரும்பவேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளமையால், அதிபர், ஆசிரியர்கள் நாளை (02) பணிக்குத் திரும்பி வேண்டிய அவசியமில்லை. பாடசாலைகள் திறந்தவுடன் கடமைக்கு அழைக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகையால், அரச ஊழியர்களை பணிகளுக்கு அழைக்கும் சுற்றுநிரூபம் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு பொருந்தாது என்றும் கல்வியமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.