காதலியுடன் சென்ற கணவனை மீட்க மனைவி அரங்கேற்றிய நாடகம் வினையான சம்பவம்

கர்ப்பிணி பெண் போல நாடகமாடிய பெண்ணால் பரபரப்பு

கள்ளக்காதலியுடன் வசித்து வரும் தனது கணவரை மீண்டும் தன்னிடம் கொண்டு வருவதற்காக பெண் ஒருவர் செய்த நாடகம் வினையான சம்பவம் ஒன்று மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (22) மாலை மாதம்பே செம்புகட்டிய பிரதேசத்தில் பொலிஸாரினால் இந்த பெண் பொறுப்பேட்கப்பட்டுள்ளார்.

தான் கர்ப்பிணி பெண் என தெரிவித்து கடந்த மே மாதம் குறித்த பெண் மற்றுமொரு ஆணுடன் மாதம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று சென்றுள்ளார்.

மாதம்பே செம்புகட்டிய லியகொமுவ தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றில் இவ்வாறு வாடகைக்குச் சென்றுள்ளனர்.

தனது மனைவியிடம் இருந்து பிரிந்து குறித்த பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்கள் கடந்தும் குறித்த இருவரும் அயலவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனால் அயலவர்கள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த நிலையில் அவர்களை அவதானித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண் வீட்டிற்கு பின் பக்கம் சாதாரண பெண் போல இருந்ததை அயலவர் ஒருவர் கண்டுள்ளார்.

இந்த தகவல் கிராமத்தினுள் தீயாக பரவ, சுற்றுயுள்ளவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர் குறித்த இருவரையும் மாதம்பே பொலிஸில் கிராமத்தவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் போல நாடகமாடிய பெண்ணால் பரபரப்பு

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தான் கர்ப்பிணி பெண் அல்ல எனவும் கர்ப்பிணியாக தன்னை அடையாளப்படுத்த தலையணை ஒன்றை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் மஹரகம வைத்தியசாலையில் பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கள்ளக்காதலியுடன் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் அவரை மீண்டும் தன்னிடம் கொண்டு வருவதற்காக இவ்வாறு நாடகமாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.