நீண்ட கால கடனுக்கு எரிபொருளை பெறுவதற்கு அரபு இராச்சியத்துடன் பேசும் கம்மன்பில

கடனுக்கு எரிபொருளை பெற அரபு இராச்சியத்துடன் பேச்சு

இலங்கை எதிர்கொண்டுவரும் வெளிநாட்டு செலாவணி (டொலர் நெருக்கடி) நிலைமையை சமாளிக்க, நீண்டகால கடன் திட்ட அடிப்படையில் மசகு மற்றும் கச்சாய் எண்ணெய்யை ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து பெற்றுக்கொள்வது பற்றி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆலோசனை நடத்திவருகின்றார்.

அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவரை அமைச்சர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியிருக்கின்றார். இந்த சந்திப்புநேற்று நடத்திருக்கின்றது.

2021ஆம் ஆண்டில் முதற்காலாண்டில் இறக்குமதி செலவில் 18 வீதம் எரிபொருளுக்காக செலவாகியதோடு தற்போது டொலர் நெருக்கடியிருப்பதால் எரிபொருளை சிக்கனமாகக் கையாளும்படி அமைச்சர் கம்மன்பில கடந்த வாரத்தில் டுவிட்டர் செய்தியொன்றைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.