30ம் திகதிக்குப் பின்னர் என்ன? சுகாதார அமைச்சர் தெரிவித்தது

ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இல்லை - சுகாதார அமைச்சர்

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ​அறிவித்துள்ளார்.

“எவ்வாறாயினும் பலரின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக, முடக்கத்துடன் முன்னேறுவது சாத்தியமில்லை, அவர் சுட்டிக்காட்டினார். முடக்குவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு நாடும் தனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

பின்னிணைப்பு (பி.ப. 2.00 மணி) – ஊரடங்குச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டது