ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது – சற்றுமுன் வௌியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.