ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படுமா? சுகாதாரப் பணிப்பளர் கூறிய விடயம்

ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்படுமா? சுகாதாரப் பணிப்பளர் கூறிய விடயம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை  (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். நாளை வெள்ளிக்கிழமை கொவிட்19 ஒழிப்பு செயலணி மீண்டும் கூடவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பதிவாகும் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகள் என்பவற்றை ஆராய்ந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு நாளை மறுதினம் அறிவிக்கப்படும்.

சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றி தங்களது வீடுகளில் இருந்தால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணங்களில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.