இலவசமாக 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி

இலவசமாக 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி

கொவிட்-19 தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும், 10, 000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு, பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக மாத்திரம், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்குமாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.