இராணுவத் தளபதியின் விஷேட அறிவிப்பு வௌியானது

இராணுவத் தளபதியின் விஷேட அறிவிப்பு வௌியானது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர், வழமை போன்றே தொழிலுக்கு செல்ல முடியும் எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.