இராஜின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த? யோஷித்த ராஜபக்ஷ கூறுவதென்ன?

இராஜ் வீரரத்னவின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த?

பிரபல்யமான பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று இராஜினாமா செய்தமைக்கான காரணம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷவினால் இராஜின் கன்னத்திற்கு அறைந்தமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் தான் இராஜை அறைந்ததாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியில் உண்மையில்லை என்று யோஷித்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது தொடர்பில் டெய்லி மீரருக்கு கருத்து வெளியிட்ட யோஷித்த ராஜபக்ஷ இராஜ் வீரரத்னவுக்கு தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.