இது அஜித் ரோஹண இல்லை

இது அஜித் ரோஹண இல்லை

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் புகைப்படம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் அவருடையது அல்ல என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்பட்டம் அவருடையது அல்ல என்றும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.