இதுவரை கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விபரம்

நாட்டில் தற்போது வரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேருக்கு எவ்வித கொவிட்-19 தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் சனத்தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 3,519,190 ஆக உள்ளது.

இந்த நிலையில், அவர்களில் 3,063,651 பேருக்கு ஏதேனும் ஒரு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட, எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

64,427 பேர் அங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்ட 36,014 பேர் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் விபரம்