100 ரூபாவுக்கும் குறைவாக அரிசி – அமைச்சரவை தீர்மானம்

அரிசி விலை இலங்கை - 100 ரூபாவுக்கும் குறைவாக அரிசி

ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாய்க்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் விநியோக வலையமைப்பு முடங்கியுள்ளதால், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் போக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், முடக்க நிலை காரணமாக நூல் அறுந்த பட்டத்தைப் போன்று பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில், மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரிசியின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதாகத் தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, கொவிட் தாக்கத்தால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரிசியின் விலையேற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கு 6 களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளன.

நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கு 6 களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரிசி விலை இலங்கை - 100 ரூபாவுக்கும் குறைவாக அரிசி

அரிசியின் நிர்ணய விலையை பேணுவதற்குத் தேவையான அனைத்து ஆரம்பக்கட்டநடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெல்லின் விற்பனை விலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.