அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? அரசாங்கத்தின் அறிவிப்பு வௌியானது

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைக்க தீர்மானமில்லை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைக் கூறினார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு நன்கொடையாக அளிக்கும் அமைச்சரவை முடிவு அரச துறையில் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என்றார்.

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை நேற்று முடிவு செய்திருந்தது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு அரச துறையிலோ அல்லது தனியார் துறையிலோ ஊதியக் குறைப்புக்கான முயற்சியாகும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அழகப்பெரும கூறினார்.

எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைக்க தீர்மானமில்லை