அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீர் உயர்வு

அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீர் உயர்வு

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீரென பாரியளவு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

மொத்த விற்பனை விலை உயர்வு காரணமாக பருப்பு, சீனி, கிழக்கு, வெங்காயம், நெத்தலி மற்றும் கருவாடு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாயிலும், வௌ்ளை சீனி ஒரு கிலோ கிராம் 220 ரூபாயிலும், இலங்கை கிழங்கு ஒரு கிலோ கிராம் 300 ரூபாயிலும், இந்திய கிழங்கு ஒரு கிலோ கிராம் 240 ரூபாயிலும், இலங்கை வெங்காயம் ஒரு கிலோ கிராம் 135 ரூபாயிலும் சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ கிராம் 400 வரையிலும் அதிகரித்துள்ளது.

சதொசயில் சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஒரு தொகை சீனி கிடைக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் ஒரளவு விலை குறையும் என எதிர்பார்ப்பதாக சதொச தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் பலவற்றின் விலை திடீர் உயர்வு

அத்தியவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில் கல்முனை லங்கா சதொசவில் இன்று சீனி  ஒரு கிலோ120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.