ஆசிரியர்களுக்கு மாதாந்தம் மேலதிகமாக 5000 ரூபா வழங்க தீர்மானம்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு - Tamil news today

அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு அடுத்த வரவு செலவு திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

கொவிட் பரவல் காரணமாக, இணையவழி முறைமையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதற்கமைய, அடுத்த பாதீட்டுடன், சில கட்டங்களின் அடிப்படையில், தீர்வு ஏற்படும் வகையில், ஆசிரியர், அதிபர்களின் வேதனம் அதிகரிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இது குறித்து ஆசிரியர்கள், அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று கூடி ஆராய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மிக நீண்ட காலமாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு - Tamil news today

இந்த சம்பள முரண்பாட்டைக் களையக் கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சம்பள முரண்பாட்டை களையும் வகையில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ளும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பு சில கட்டங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply