அதிசக்திவாய்ந்த பாரியளவு வெடிபொருட்களுடன் இருவர் கைது

அதிசக்திவாய்ந்த பாரியளவு வெடிபொருட்களுடன் இருவர் கைது

கல் சார்ந்த வேலைத்தளமொன்றை முன்னெடுக்கும் போர்வையில் மிகவும் சக்திவாய்ந்த பாரியளவான வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் மாத்தறை – கந்தர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி அமோனியம் நைட்ரஜனை வைத்திருந்த ஒருவர் மாத்தறை – மெத்தவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1050 கிலோகிராம் அமோனியம் நைட்ரஜனும் 672 நைட்ரஜன் குச்சிகளும் 10 மீட்டர் நீளமான நைலோன் நூல் 50 சுருள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 1000 கிலோகிராம் அமோனியம் நைட்ரஜனுடன் மாத்தறை – கெக்குனதுர பகுதியில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.