அஜித் ரோஹணவின் உடல்நிலை குறித்து வௌியாகியுள்ள செய்தி

அஜித் ரோஹணவின் உடல்நிலை குறித்து வௌியாகியுள்ள செய்தி

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நேற்றைய தினம் மாலை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆயினும் அவரது நிலை மோசமானதாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவர் சாதாரண வார்ட் அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கூறுகின்றது.